மனைவியை கொன்ற கணவன் கைது

மண்டியா : ஜனவரி. 26 – இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டிருந்த மனைவியை மகளின் எதிரிலேயே கொடூரமாக கொலை செய்த கொடூர கணவனை ஸ்ரீரங்கப்பட்டானா கிராமாந்தர போலீசார் கைது செய்துள்ளனர்.
பாண்டவபுரா தாலூகாவின் அரலுகுப்பேவில் வசித்து வந்த ஷோபா (43) என்பவரை கொலை செய்து விட்டு தலைமறைவாயிருந்த மனோகர் (48 ) கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி. 23 வருடங்களுக்கு முன்னர் ஒரே கிராமத்தை சேர்ந்த ஷோபா மற்றும் மனோகர் காதலித்து பெற்றோரின் எதிர்ப்புக்கிடையேயும் திருமணம் செய்து கொண்டனர். சமீப காலமாக மனோகர் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே காலம் கழித்து வந்துள்ளான். தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தும் எந்த பொறுப்பும் இன்றி சதா குடித்து மனைவியுடன் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளான். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பைக் கடன் விஷயமாக கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னுடைய மகனுக்கு மாத தவணை கணக்கில் ஷோபா பைக் வாங்கி கொடுத்திருந்தார். கடந்த மூன்று மாதங்களாக கடன் தவணையை கட்ட முடியவில்லை. இதனால் நிதி நிறுவனத்தினர் மனோஹருக்கு போன் செய்து கடன் தவணை கட்டுமாறு வற்புறுத்தியுள்ளார். தவிர வீட்டருகில் வந்து நிதி நிறுவன ஊழியர்கள் பணம் கட்டுமாறு வற்புறுத்தியுள்ளனர் .இந்த விஷயமாக மனைவியிடம் தகராறு செய்த மனோகர் பின்னர் தகராறு முற்றிய நிலையில் மனைவி ஷோபாவை தன மகளின் எதிரிலேயே கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளான். பின்னர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு மனோகரை கைது செய்துள்ளார்.