மனைவியை கொன்ற கணவன் தப்பி ஓட்டம்

பெங்களூர்: நவம்பர். 22 – ஆயுதங்களால் கொடூரமாக மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு கணவன் தப்பியோடியுள்ள சம்பவம் நெலமங்களா தாலூகாவின் பூசந்திரா கிராமத்தில் உள்ள வீடொன்றில் நடந்துள்ளது. பூசந்திராவில் வசித்து வந்த ஸ்ருதி (29) என்பவர் கொலையுண்ட மனைவியாவார். வரதட்சணைக்காக தன் மனைவியையே கணவன் கொலை செய்து விட்டு தற்போது தலைமறைவாகியுள்ளான். திருமணமான ஆன மூன்று மாதங்களுக்கு பின்னர் மனைவியை கணவன் கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து வரதட்சணை கொடுமைகள் செய்துள்ளான். பிறந்த வீட்டிலிருந்து பணத்தை கொண்டுவராததால் இந்த கொடூர செயலை செய்து விட்டு தற்போது கணவன் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாகியுள்ளான். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு நெலமங்களா கிராமாந்தர போலீசார் வந்து பரிசீலனை நடத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.