மனைவியை வெட்டிக் கொன்று கணவன் தற்கொலை

பெங்களூர் ஆகஸ்ட் 2- மனைவியை அறிவாளால் கொடூரமாக வெற்றிகொண்ட கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆனேக்கல் தாலுகாவில் நடந்துள்ளது
சர்ஜாபூர் அருகே பிக்கனஹள்ளியில் உள்ள ஜனதா காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு வெங்கடசாமி வயது 53 லட்சுமி அம்மா வயது 47 ஆகிய கணவன் மனைவி வசித்து வந்தனர் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது இவர்கள் தனியே வசித்து வந்தனர். இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு அடிக்கடி தகராறு சண்டை நடந்து வந்துள்ளது. இதன்படி நேற்றைய இரவு கணவன் மனைவி இடையே கடும் தகராறு சண்டை அடிதடி மோதல் ஏற்பட்டு உள்ளது. அப்போது கடும் ஆத்திரமடைந்த கணவர் அரிவாலை எடுத்து மனைவியை கொடூரமாக படுகொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வீட்டு கதவு திறக்கப்படவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர் உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதைத் தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மனைவி ரத்த வெள்ளத்தில் பணமாக கிடைத்துள்ளார் அவரது அருகே கணவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து இரண்டு உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது