மனைவி குழந்தைகள் இருந்த வீட்டுக்கு தீ வைத்த கணவன்

ஹாசன் : நவம்பர். 19 – சண்டைகள் நடந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கணவன் தன் குழந்தைகளை அடிக்கடி பார்க்க வந்துள்ள நிலையில் நேற்று குழந்தைகளை பார்க்க வரவில்லை என்ற காரணத்திற்க்காக கோபமடைந்த கணவன் தன் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்த வீட்டுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் தொட்டபீக்கனஹள்ளி என்ற இடத்தில் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் கீதா , சிரந்தன் (7) மற்றும் நந்தன் (5) ஆகியோர் காயங்களடைந்த நிலையில் ஹாசன் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தவிர கணவன் வைத்த தீயால் வீட்டில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் தீக்கிரையாகி சாம்பலாகியுள்ளன. அங்கனஹள்ளியை சேர்ந்த ரங்கசாமி மற்றும் கீதா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் தம்பதியருக்கிடையே நிலம் விஷயமாக அடிக்கடி சண்டைகள் நடந்து வந்துள்ளது. இது விஷயமாக கோரூரு போலீஸ் நிலையத்தில் புகாரும் பதிவாகியிருந்தது.
ஆனால் குடும்ப உறவில் ஒற்றுமை ஏற்படாத நிலையில் கடந்த நான்கு மாதங்களாக தம்பதியர் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கீதா குழந்தைகளை தன்னிடம் வைத்திருந்தார். குழந்தைகள் மனைவியுடன் இருப்பதால் கணவன் அடிக்கடி வந்து குழந்தைகளை பார்த்து விட்டு செல்வான் ஆனால் நேற்று குழந்தைகளை பார்க்க வந்த ரங்கசாமி வீட்டுக்கு தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பியோடியுள்ளான்.