மனைவி மர்ம சாவு கணவன் மீது சந்தேகம்

பெங்களூரு, ஜன.12-
பெங்களூர் தீபாஞ்சலி நகரில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இல்லத்தரசி பிணமாக கிடந்த நிலையில், அவர் கணவனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீபாஞ்சலி நகரில் உள்ள ஒரு வீட்டில் இல்லத்தரசி ஜைதா (22) இறந்து கிடந்தார்அவரது கணவர் சைஃப் அலி தனது மனைவியைத் தாக்கி, தூக்கிலிட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சைஃப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஜைதா. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் மனைவி மர்ம சாவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது