மனைவி, மாமியார் எனக்கு சூன்யம் வைத்தனர்: தொழிலதிபர் குற்றச்சாட்டு

பெங்களூரு, செப். 4- 38 வயதான தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி, மாமியார் த‌னக்கு சூன்யம் வைத்தனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கர்நாடகா தடுப்பு மற்றும் மனிதாபிமானமற்ற தீய பழக்கவழக்கங்கள் மற்றும் சூன்யம் சட்டம் 2017ன் கீழ் கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு சர்ச் தெருவில் உள்ள ரெஸ்ட் ஹவுஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 2022 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி டாக்டர் காஞ்ச‌னா, 35, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி ராஜேஷ் வீட்டிற்கு திரும்பியபோது, அவரது மனைவி தனது இரண்டு கட்டைவிரல்களையும் வெட்டிவிட்டு, குளியலறையில் பரவியிருந்த சாம்பல், கற்பூரம் மற்றும் தேங்காய் மீது கசிந்த ரத்தத்தை தெளித்துக் கொண்டிருந்தார். பல்வேறு இடங்களில் எலுமிச்சை துண்டுகள் சிதறி கிடப்பதையும், குளியலறையிலும் சில மூலைகளிலும் பூஜை நடந்ததற்கான அறிகுறிகள், தெரிந்தன. வீட்டில் ஏதோ நடந்ததாக‌ சந்தேகிக்கப்பட்ட ராஜேஷ், இது குறித்து விசாரிக்க ஒரு துப்பறியும் நிறுவனத்தை நியமித்தார். அவரது மனைவியும் அவரது பெற்றோரும் அத்திகுப்பேயைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவரையும், மயானத்தில் சடங்குகள் செய்யும் பூசாரியையும் சந்தித்ததாக ஏஜென்சி அறிக்கை அளித்தது.ஜூன் 22ஆம் தேதி, அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். திரும்பி வந்த பிறகு, அவள் வெவ்வேறு எண்ணெய்களில் சமைத்து, அவருக்கும் அதே உணவு பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.
ராஜேஷின் தாயாரும் தனக்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் எண்ணெய் உற்றி சமைத்த உணவை பரிமாறப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து, காஞ்சனாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்ப குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
ஜூலை 5 தேதி காஞ்சனா பெற்றோரின் வீட்டிற்கு சென்றப் பிறகு, ராஜேஷின் தந்தை கடந்த படுத்த படுக்கையாக இருப்பதாகவும், சில மாதங்களுக்கு முன்பு அவரின் நாய் இறந்துவிட்டதாகவும், வீட்டில் நடைபெற்ற சடங்குகள் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என்று ராஜேஷ் சந்தேகித்துள்ளார். தனது மனைவி, அவரது தாயார் தனக்கு சூன்யம் வைத்துள்ளதாக அவர் நம்பியுள்ளார். இதனையடுத்து சனிக்கிழமை மாலை அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த‌தாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக நாங்கள் விரைவில் விசாரணையைத் தொடங்க உள்ளோம் என்று அவர் தெரிவித்தார். மனைவி மற்றும் அவர் தாயார் சூன்யம் வைத்ததாக பதிவு செய்யப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.