
பெங்களூரு, நவ. 21: மனைவி மீது சந்தேகமடைந்த கணவர், அவரது முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது.மனைவியை மீது சந்தேகித்து, 40 வயது நபர் அவரது முகத்தில் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ள மிக கொடூரமான செயல் நடைபெற்றுள்ளது. பனசங்கரி பவானிநகரில் கடந்த வியாழன் அன்று நடந்த இந்தச் சம்பவத்தில் தீபிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கு முகம் மற்றும் மார்பில் 30% தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயமடைந்த அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தனர். இருப்பினும், அவரது முகம் பழைய நிலைக்கு திரும்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.தீபா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்தார். குற்றம் சாட்டப்பட்ட அவரது கணவர் ஸ்ரீனிவாஸ் பிளம்பர் ஆக பணி செய்து வருகிறார். அவர்களுக்கு 2 டீன் ஏஜ் குழந்தைகள் உள்ளனர்.
இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ஷிப்டில் பணிபுரியும் தீபிகா, பகலில் வீட்டில் தங்கி, வேறு ஒருவருடன் தொடர்பு வைத்து கொண்டுள்ளதாக, ஸ்ரீனிவாஸ் சந்தேகம் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். தீபிகா நவ. 15ம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு மறுநாள் காலை வீடு திரும்பினார். ஸ்ரீநிவாஸ் வேலைக்குச் செல்லாமல் காத்திருந்து, தீபிகா வீட்டிற்குள் நுழைந்ததும், நேற்று இரவு அவர் எங்கே சென்றார் என்று விசாரிக்க ஆரம்பித்தார். தான் மருத்துவமனையில் இருந்ததாக தீபிகா தெரிவித்துள்ளார். முந்தைய நாள் இரவு மருத்துவமனைக்குச் தான் சென்றதாகவும், தீபிகா வேலைக்குச் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார். திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீனிவாஸ் பெட்ரோல் பாட்டிலை எடுத்து அவர் மீது ஊற்றி தீக்குச்சியால் தீ வைத்துள்ளார். இதில் தீபிகாவின் முகம், மார்பு உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இது திட்டமிட்ட செயல் என விவரித்த போலீசார், அன்றிரவே ஸ்ரீனிவாஸ் பாட்டிலில் பெட்ரோல் வாங்கினார் என்றும், இந்த சம்பவம் அவர்களது மகள் கண் முன்னே நடந்ததாகவும் தெரிவித்தனர். தீபிகா உதவி கேட்டு கதறியபோது, ஸ்ரீநிவாஸ் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளார். பின்னர் மகளின் உதவியுடன் தீபிகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.