மனைவி, 2 குழந்தைகளை கொன்று சடலங்களுடன் 3 நாட்கள் கழித்த நபர்

லக்னோ (உத்திரபிரதேசம்), ஏப். 1: மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொடூரமாக கொன்ற நபர், சடலங்களுடன் 3 நாட்களை கழித்த கொடூர சம்பவம் பிஜ்னூர் அருகே நடந்துள்ளது.
ராம் லகான் (32) தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, பிஜ்னூரில் உள்ள சரவணாநகர் பகுதியில் அவர்களது சடலங்களுடன் 3 நாட்கள் கழித்தார்.
வாடகை வீட்டில் வசித்து வந்த ராம் லகான், தனது மனைவி திருமணத்திற்கு பிறகு வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்துள்ளார். அதனால் ராம் லகான் தனது மனைவி ஜோதி (30), மகன்கள் பயல் (6), ஆனந்த் (3) ஆகியோரைக் கொன்றார். அவரது மனைவி ஜோதியை அவர்களது குழந்தைகள் முன்னிலையில் துப்பட்டாவால் கழுத்தை நெரித்த பிறகு, ராம் லகான் இரண்டு குழந்தைகளையும் கொன்றார். பின்னர் மறுநாள் ஒன்றும் நடக்காதது போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார்.
ராம் லகானுக்கும் ஜோதிக்கும் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. சமீபகாலமாக, மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்த அவர், அவரது தொலைபேசி அழைப்புகள் குறித்து பலமுறை விசாரித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மார்ச் 28 ஆம் தேதி இரவு சண்டை ஏற்பட்டது. அதன் பிறகு மனைவி, 2 குழந்தைகளை கொன்றுள்ளார் என்று காவல் துணை ஆணையர் (தெற்கு) டி. எஸ். சிங் தெரிவித்தார்.