
பெங்களூரு, மார்ச்.2-
புற்று நோயால் பாதிக்கப்பட்ட கணவன் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை விஷம் கலந்த உணவை கொடுத்து வைத்து கொன்றுவிட்டு தானும் விஷம் உணவை சாப்பிட்டுள்ளார். ஆனால் இவர் உயிர் போகாமல் கவலைக்கிடமாக உள்ளார். இந்த பரிதாப சம்பவம் பெங்களூர்
கோணனகுண்டே வத்தர்பாளையத்தில் நடந்துள்ளது.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் பெயர் நாகேந்திரன்.
மனைவி விஜயா (28), குழந்தைகள் நிஷா (7), தீக்ஷா (5). நாகேந்திரன் நேற்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளின் உணவில் மருந்து, எலி மருந்து கலந்து உள்ளார். குடும்பத்துடன் சேர்ந்து அவரும் அதே விஷ உணவை சாப்பிட்டுள்ளார்
காலையில், மனைவி மற்றும் குழந்தைகள் இறந்துவிட்டனர், அவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். இதனால் மனமுடைந்த நாகேந்திரன் மீண்டும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்
இதுகுறித்து இறந்த விஜயாவின் தாய் சாகம்மா கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். நாகேந்திரனுக்கு புற்று நோய் இருப்பது தெரிந்ததும் வேலையை விட்டுவிட்டார். மனைவி விஜயா மெடிக்கலில் பணிபுரிந்து குடும்பத்தை நடத்தி வந்தார். வேலையை விட்டுச் சென்ற நாகேந்திரன், செலவுக்கு பணம் தருமாறு மனைவியை துன்புறுத்தி வந்தார். சமீபகாலமாக இவரது தொல்லைகள் அதிகரித்து வந்ததாகவும் புதன்கிழமை இரவு தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றதாகவும் விஜயாவின் தாய் சாகம்மா குற்றம் சாட்டினார்
இதுகுறித்து கோணனகுண்டே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது நாகேந்திரனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.