மன்மோகன் சிங்கிற்கு கொரோனா


புதுடெல்லி ஏப்ரல் 19
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக உள்ளது. தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகிவருகிறது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 10,941 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மன்மோகன் சிங் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா 2ம் அலையில் தொற்று அதிவேகமாக பரவிவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடிக்கு ஆலோசனை தெரிவித்து மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருந்த நிலையில், அவருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.