மம்தா கட்சி வேட்பாளர் வீட்டில் சிபிஐ சோதனை

கொல்கத்தா:மார்ச் 23- திரிணாமுல் காங். வேட்பாளர் மஹுவா மொய்த்ரா வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியாக இருந்த மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுகள் பெற்றதாக, பாஜ. எம்பி. நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்துக்கு எதிராக தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்த புகாரில் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் மஹுவா மொய்த்ரா மீண்டும் போட்டியிடுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை செய்து வருகிறது. மஹுவா மொய்த்ரா தொடர்புடைய இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல மேற்குவங்க அமைச்சர் சந்திரநாத் சின்ஹா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.