மம்தா பானர்ஜி படுகாயம் – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கொல்கத்தா மார்ச் 14
மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜியின் நெற்றியில் ஒரு துளை ஏற்பட்டு அதிலிருந்து ரத்தம் அவரது முகத்தில் வழிந்து ஓடும் நெஞ்சை பதறச் செய்யும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. மருத்துவமனை கட்டிலில் மம்தா பானர்ஜி மயக்கத்தில் இருக்கும் படம் வெளியிடப்பட்டு உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் பலத்த காயம் அடைந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் இன்று இரவு தெரிவித்துள்ளது. அவர் கொல்கத்தாவில் உள்ள அரசு நடத்தும் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்தில் மம்தா பானர்ஜி பலத்த காயம் அடைந்து இருப்பதாக அவரது கட்சி சார்பில் டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறும் போது 69 வயதாகும் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு தனது வீட்டிற்கு திரும்பிய சிறிது நேரத்தில் அவரது வீட்டில் இருந்த பர்னிச்சர் சாய்ந்து அவர் மீது விழுந்ததாகவும் அதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறினர். மம்தாவின் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அவர் காயம் அடைந்த தகவல் மற்றும் புகைப்படங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது அவர் பூரண குணம் அடைய வேண்டும் என்று கட்சி தொடர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மம்தா பானர்ஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது