மரங்களை வெட்ட முடிவு


பெங்களூர், ஏப். 3- பயப்பன ஹள்ளியில் இருந்து ஓசூர் வரையிலான ரயில் பாதையை அகல படுத்த மரங்களை வெட்ட வேண்டும் என வனத்துறை அறிவித்துள்ளது. பயப்பனஹள்ளியில் இருந்து ஓசூர் வரையிலான ரயில் பாதை இரட்டிப்பாக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. இதையொட்டியே ஹிலலிகே ரயில் நிலையப் பகுதியில் உள்ள ஆயிரம் மரங்களை வெட்டுவது குறித்து ரயில்வே துறை வனத் துறைக்கு கடிதம் அனுப்பியது. மரங்களை வெட்டுவதற்கு அடையாளம் காணப்பட்ட மரங்களில் 775 அகாசியா, 308 யூக்கலிப்டஸ், ஒரு வேம்பு ஆகியவை உள்ளன. யூகலிப்டஸ் மற்றும் அகாசியா மரங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே ரயில்வே துறையால் நடப்பட்டன. இதை அகற்றுவதால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என கே – ரைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மரங்கள் வெட்டப்படும் சூழலில் வனத்துறை அடையாளப்படுத்தும் இடங்களில் மீண்டும் புதிய மரக்கன்றுகளை நடுவதற்கு தயாராக உள்ளதாக நிறுவன இயக்குனர் அமித் தெரிவித்துள்ளார். ரெட்டிப்பு பாதை பணிகள் 50 கிலோ மீட்டர் தூரம் நடத்தப்படவேண்டும். இப்பணிகள் 480 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. மரங்களை அகற்றுவதற்கு ஆட்சேபணை தெரிவிப்போர் 10 நாட்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.