மராட்டிய முன்னாள் முதல்வர் மறைவு

மும்பை, பிப். 23 -மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி (86) மாரடைப்பால் மும்பையில் காலமானார்.
மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நந்தவி கிராமத்தில் 1937 டிச.2-ம் தேதி பிறந்தார். 1995 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் மராட்டிய மாநில முதலமைச்சராக பதவி வகித்தார். சிவசேனை கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மனோகர் ஜோஷி. நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அவைகளுக்கும் தேர்வானவர் மனோகர் ஜோஷி. 1972 முதல் 1989 வரை மராட்டிய மாநில சட்ட மேலவை உறுப்பினராக பதவி வகித்தார்.
2002-2004 வரையிலான காலகட்டத்தில் மக்களவை சபாநாயகராக பதவி வகித்தார். 2006-2012 வரை மாநிலங்களவை உறுப்பினராக மனோகர் ஜோஷி பதவி வகித்துள்ளார். 1990 முதல் 1999 வரை மராட்டிய மாநில சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.