மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் பங்கேற்பு


வாணியம்பாடி பிப் 23: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் இயற்பியல் முதுகலை ஆய்வியியல் துறை மற்றும் புத்தக படித்துறை அறக்கட்டளை இணைந்து நடத்திய தேசிய அளவிலான இயற்பியல் கருத்தரங்கு கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

21 ஆம் நூற்றூண்டில் அறிவியில் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் இன்பவள்ளி தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் சபரி வரவேற்றார்.

கருத்தரங்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி துறையின் உதவி இயக்குநர் முனைவர் கணேஷ்குமார், இஸ்ரோ ஏவுகனை விஞ்ஞானிகள் சசிகுமார், அரவிந்த் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினார். மேலும் பள்ளிக்குழு பாடதிட்டகுழு உறுப்பினரும், சாகித்யா அகாடமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற ஆயிஷாநடராஜன் கலந்துக் கொண்டு அவரது நியுட்டன் கடவுளை நம்பியது ஏன் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

கருத்தரங்கில் 15க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்டனர். கருத்தரங்கில் கலந்துக் கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கவிஞர் பால்கி, நியுட்டன் பாண்ட்ஸ் நிறுவனர் சிங்காரவேலன், படித்துறை அறக்கட்டளை நிறுவனர் இளம்பரிதி, அண்ணா அறிவகம் கல்வியியல் கல்லூரி முதல்வர் சந்தானகிருஷ்ணன், நியுட்டன் பாண்ட்ஸ் நிறுவனர் சிங்காரவேலன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

கருத்தரங்கினை கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் சக்திமாலா ஒருங்கிணைந்தார். முடிவில் இயற்பியில் துறைத் தலைவி பவித்ரா நன்றி கூறினார்.