மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி,ஜனவரி. 25 – டெல்லி ஷாதாராவில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 9 பள்ளி மாணவிகள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிழக்கு டெல்லியின் ஷாதாரா மாவட்டத்தில் உள்ள டெல்லி அரசுப் பள்ளியில் நேற்று மதியம், மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 9 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.