மருத்துவ கழிவுகளை கொட்டிய மருத்துவமனைக்கு அபராதம்

பெங்களூர் : மே 27 – பொது இடத்தில் மருத்துவனையின் உயிர்வழி கழிவுகளை (பயோ மெட்ரிக் ) கொட்டியாதால் ஒரு மருத்துவமனைக்கு மாநகராட்சி 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. விஜயநகர இரண்டாவது பிளாக்கில் பைப் லைன் வீதியில் கடந்த வாரம் மேம்பாலத்தின் கீழ் புது இடத்தில் ஷிபா மருத்துவமனைக்கு சொந்தமானபயன்படுத்தப்பட்ட மருத்துவஊசிகள் , மருத்துவ சீசாக்கள் உட்பட பல மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதை மாநகராட்சி பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். மாநகராட்சியின் திட கழிவு மேலாண்மை சட்ட விதிகளின்படி தேவையற்ற குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவோருக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்க அனுமதி உள்ளது.
பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது மற்றும் குப்பைகளை இனம் பிரிக்காமல் கொட்டுவது இரண்டும் இதற்குள் அடக்கம்.ஷிபா மருத்துவமனை போன்று அதிக அளவில் மருத்துவ கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கென்ன தனி நியதிகள் உள்ளது. துப்புரவு பணியாளர்கள் , சாலைப்போக்கர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை இந்த அபாயகரமான குப்பைத்தொற்றுகளிலிருந்து காப்பாற்றும் வகையில் இந்த குப்பைகள் அதற்கென உள்ள அதிகாரபூர்வ அனுமதிக்க பட்ட ஏஜென்சிகள் வாயிலாக அகற்றப்பட வேண்டும். இதே போல் கணேஷ் மந்திர் பகுதியில் உள்ள ஸ்ரீ பணகிரி வரசித்தி விநாயகா கோயில் நிர்வாகம் பிளாஸ்டிக் கழிவுகளை பொது இடத்தில் கொட்டியதற்காக 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.