பெங்களூரு : செப்டம்பர். 23 – தொழிலதிபர் கோவிந்த பூஜாரிக்கு பைந்தனூர் பி ஜே பி டிக்கெட் கொடுப்பதாக நம்பவைத்து கோடி கணக்கில் பணத்தை சுருட்டிய மோசடி விவகாரத்தின் மூன்றாவது குற்றவாளி ஹிரேஹடகலி மடத்தின் மடாதிபதி ஸ்ரீ அபிநவ ஹாலஸ்ரீ ஸ்வாமீஜி மற்றொரு டிக்கெட் மோசடி வழக்கில் சிக்கியுள்ளார் . ஷிரஹட்டி சட்டமன்ற தொகுதியின் பி ஜே பி டிக்கெட் கொடுப்பதாக பஞ்சாயத்து அபிவிருத்தி அதிகாரி (பி டி ஓ ) ஒருவரிடமிருந்துது ஒரு கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார் என முண்டரகி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது . ஷிரஹட்டி தாலூகாவின் ரணத்தூரு கிராம பஞ்சாயத்து பி டி ஓ வாக இருந்த சஞ்சய் சடவாலா என்பவருக்கு பி ஜே பி டிக்கெட் வாங்கி கொடுப்பதாக நம்பவைத்து ஹாலஸ்ரீ மோசடி செய்துள்ளார். ஷிரஹட்டி சட்டமன்ற தொகுதி பி ஜே பி டிக்கெட் பெறுவதில் ஆர்வமாயிருந்த சஞ்சய் ஹாலஸ்ரீ மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் இவரிடம் வரும் பி ஜே பி பிரமுகர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றை கவனித்து வந்து இதனால் ஹாலஸ்ரீ மீது நம்பிக்கை வைத்துள்ளார் . ஆனால் டிக்கெட் கொடுக்கும் விஷயமாக ஒரு கோடி ரூபாய் அளவில் பேரம் நடந்துள்ளது. சஞ்சய் ஒரு கோடி ரூபாயை ஹாலஸ்ரீயிடம் கொடுத்துள்ளார் . ஆனால் ஷிரஹட்டி டிக்கெட் வாங்கி கொடுப்பதில் ஹாலஸ்ரீ வெற்றியடையவில்லை . பின்னர் சஞ்சய் தன்னுடைய பணத்தை திருப்பி தருமாறு ஹாலஸ்ரீயை எவ்வளவோ வற்புறுத்தியும் ஹாலஸ்ரீ இதற்க்கு பணிந்ததாய் தெரியவில்லை . இதற்கிடையில் கோவிந்த பூஜாரி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த செப்டம்பர் 8 அன்று போலீஸ் நிலையத்தில் தனக்கெதிராக வழக்கு பதிவான உடனேயே விழித்துக்கொண்ட ஹாலஸ்ரீ தன்னுடைய வேறு பல விவகாரங்கள் குறித்து வெளிவரவேண்டாம் என என்று சஞ்சய்க்கு போன் செய்து அவருடைய பணத்தை திருப்பிவாங்கி செல்லுமாறு தெரிவித்துள்ளார். . சஞ்சய் ஓரிரண்டு நாட்கள் கழித்து பணத்தை பெற்று கொள்ள மடத்திற்கு செல்வதற்குள்ளாகவே ஹாலஸ்ரீ மடத்திலிருந்தே காணாமல் போனார் . அப்போது சஞ்சய் ஹாலஸ்ரீயின் கார் ஓட்டுனரை தொடர்பு கொண்டுள்ளார் . அந்த நேரத்தில் ஹாலஸ்ரீ ஹிரேஹடகலி மடத்தை விட்டு மைசூர் நோக்கி செல்வது தெரியவந்துள்ளது . இதற்கிடையில் ஹாலஸ்ரீ கார் ஓட்டுநர் சி சி பி வலையில் சிக்கியதுடன் சி சி பி போலீசார் சஞ்சய் மற்றும் ஹாலஸ்ரீ கார் ஓட்டுநருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகளை உ உன்னிப்பாக ஆய்ந்ததில் ஹாலஸ்ரீயின் மற்றொரு மோசடி தெரியவந்துள்ளது. சி சி பி விசாரணைக்கு பின்னர் இப்போது சன்ஜய் முண்டரகி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். சன்ஜய் ஷிரஹட்டி தாலூகாவின் ஹெப்பாளா கிராமத்தை சேர்ந்தவர். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் . இந்த தொகுதியில் பட்டியலின ஒதுக்கீட்டில் டிக்கெட் பெற இவர் அருந்ததி அறக்கட்டளை என்ற பெயரில் பல சமூக சேவைகள் செய்து வந்துள்ளார் . ஆனாலும் அரசு பணியில் கவனம் செலுத்தாததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். . செப்டம்பர் 19 அன்று இரவு போலீஸ் நிலையத்தில் சஞ்சய் புகார் அளித்துள்ளார். அதில் தேர்தலுக்கு முன்னராக ஒரு கோடி ரூபாயை தான் ஹாலஸ்ரீக்கு கொடுத்துள்ளதாகவும் ஆனால் இதற்க்கு சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் வெறும் என் சி ஆர் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் திருப்பி அனுப்பியுள்ளனர். . இதற்கான ஆதாரத்தை கொண்டுவருமாறும் அவருக்கு தெரிவித்துள்ளனர் .