மலைக்க வைத்த மலைவாழ் மக்கள் திருவிழா

வேலூர்: ஜூலை 1-
வேலூர் மாவட்டத்தில் நடந்த மலைவாழ் மக்களின் திருவிழா, இணையத்தில் வைரலாகி, பரவசத்தை தந்து வருகிறது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தில் பழமையான தேசத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு, வருடந்தோறும் வைகாசி மாதம் 10ம் தேதி தேசத்து மாரியம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
மலைவாழ் மக்கள்: அதேபோல, ஒடுகத்தூர் அருகே தொங்குமலை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலிலும் கோலாகலமாக மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழா நடைபெறும்.. வேலூர் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்றது இந்த மலைவாழ் மக்களின் திருவிழாவாகும். ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது இந்த தொங்குமலை கிராமம்.. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.. ஜலாமரம்: இங்கு பல தலைமுறைகளை கடந்து பாரம்பரியமாக காளியம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது…
இதற்காகவே, வெட்டவெளியில் ஜலாமரம் என்ற மரம் வைத்து வழிபட்டு வருகிறார்கள் அக்கிராம மக்கள். மலைவாழ் மக்களின் முன்னோர்கள் வழிபட்டு வந்த மரம் இதுவாகும். கயிறு, மரக்கட்டையாலான கத்திகள், மேளம் போன்றவற்றை முன்னோர்கள் இந்த மரத்தில் வைத்துதான் வழிபட்டு வந்திருக்கிறார்கள்.
அதேபோல, இந்த திருவிழாவில் முத்தாய்ப்பாக அமைவது எருகட்டும் நிகழ்ச்சியாகும். தொங்குமலை கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவுக்காக, ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அந்த பகுதி மக்கள் காப்பு கட்டி விரதத்தை ஆரம்பித்தார்கள்.. எருகட்டும் நிகழ்ச்சிக்காகவே, இந்த எருதுகட்டும் நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய மைதானத்தில் மூங்கில்களால் அமைக்கப்பட்ட 6 கொட்டகைகள் கட்டப்பட்டன.. வாழை, வண்ண மலர்கள், பலா, மாம்பழம் உள்ளிட்டவற்றை கொண்டு அவைகள் அலங்காரங்கள செய்யப்பட்டிருந்தன. அலங்காரம்: பின்னர் நேற்றைய தினம், காளியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் நடந்தது.. இதற்காகவே, மலைவாழ் மக்கள், ஊர் சீதனத்தை கொண்டு வந்திருந்தனர்.. பிறகு, நேர்த்திக்கடனுக்காக கிட்டத்தட்ட 100 ஆடுகளை பலியிட்டு காளியம்மனை வழிபட்டார்கள்.. இதற்குபிறகு, ஜாலாமரம் என்றழைக்கப்படும் மரத்தில் வழிபாடு செய்யப்பட்டது