
சென்னை, மார்ச் 1- தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது நிலையில் இன்று (மார்ச் 1) தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை முதல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.