மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் உதவி

சிவமொக்கா, நவ. 25- மழை சேத நிவாரண பணிகள் குறித்து அரசியல் கட்சிகள் கூறிவரும் புகார்களில் உண்மைகளில்லை . அனைத்து அமைச்சர்களும் மாவட்ட பயணங்கள் மேற்கொண்டு நிவாரணப்பணிகள் சரியான விதத்தில் நடக்கும் வகையில் நிர்வகித்து வருகிறார்கள் என முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பா கூறினார். சிவமொக்கா மாவட்டத்தில் மேலவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பா இன்று சிவமொக்கா வில் செய்தியாளர்களிடம் பேசும்போது எதிர்க்கட்சிகள் வீட்டுக்குள் அமர்ந்து ஆதரங்களற்ற குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். எதிர்க்கட்சிகளின் புகார்களில் எவ்வித உண்மையும் இல்லை. மாநிலத்தில் மழையால் பெருமளவில் சேதங்களேற்பட்டுள்ளன. நிவாரண பணிகளுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை 500 கோடி ரூபாய்கள் ஏற்கெனவே விடுத்துள்ளார். இன்னும் அதிக உதவி தேவைப்படுகிறது. முதல்வருடன் பேசி சங்கடத்தில் உள்ள விவசாயிகளுக்கு கூடுதல் உதவிகளை செய்வதாக எடியூரப்பா தெரிவித்தார். மழை சேத நிவாரண பணிகள் நடக்கவில்லை. ;அமைச்சர்கள் பயணங்கள் மேற்கொள்ளவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. மாநிலத்தில் ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் நடந்துள்ள ஏ சி பி சோதனைகளில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.