மழை: கர்நாடக கடலோரமாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூர் : ஆகஸ்ட் .2 – கடந்த நான்கைந்து நாட்களாக மாநிலம் முழுக்க மழையின் அளவு குறைந்துள்ளது. ஆனாலும் மாநிலத்தின் சில மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு உட்பகுதி மாவட்டங்களில் மழை குறைந்திருப்பினும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. நாளை மாறும் நாளை மறுநாள் மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கான வாய்ப்புகள் உள்ளதால் இந்த மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது சிவமொக்கா , பெங்களூர் கிராமந்தரம் , சிக்கமகளூரு , தாவணகெரே , ஹாசன் , மற்றும் குடகு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தவிர சாமராஜநகர் , மண்டியா ஆகிய பகுதிகளில் உலர் காற்று வீசும் வாய்ப்புகள் உள்ளது. இந்த பகுதிகளில் மதியத்திற்கு பின்னர் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மாநிலத்தில் மழையின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் மாநிலத்தின் நீர் தேக்கங்களுக்கு வரும் நீரின் அளவும் குறைந்து வருகிறது . இன்றைய மாநில மாவட்டங்களின் சீதோஷ்ண நிலை மாவட்ட வாரியாக பெங்களூரு 28 – 21 , சிக்கபளப்புரா 28 – 19 , கோலார் 31 – 21 . பெங்களூர் க்ராமந்தரம் 28 – 21 , தும்கூர் 29 – 21 , சித்ரதுர்கா 28 – 21 , ஹாவேரி 27 – 22 , தாவணகெரே 28 – 22 , உத்தர கன்னடா 28 – 25 , உடுப்பி 28 – 24 , தக்ஷிண கன்னடா 28 – 24 , மண்டியா 31 – 22 , சிவமொக்கா 26 – 21 , ராம்நகர் 31 – 21 , சிக்கமகளூர் 24 – 18 , மைசூர் 29 – 21 , மடிகேரி 22 – 18 , சாமராஜ்நகர் 30 – 21 , ஹாசன் 25 – 19 , கொப்பால் 29 – 23 , கதக் 28 – 22 , பெல்லாரி 31 – 23 , பீதர் 27 – 22 , விஜயபுரா 29 – 22 மற்றும் ராயசூரில் 31 – 29 என்ற அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச உஷ்ணநிலை நிலவிவருகிறது.