மழை காரணமாக பெங்களூரில் விமான போக்குவரத்து பாதிப்பு

பெங்களூர் : மே. 14 – கடந்த ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நகரின் கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நகரில் பெய்து வரும் மழையே இதற்க்கு காரணமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விட பட்டன. சரியான சீதோஷ்ணநிலை இல்லாததால் விமானங்கள் தரையிறங்க முடிய வில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு 11.18 முதல் 11.54 வரை நகரில் எந்த விமானமும் தரையிறங்க முடியவில்லை. பலத்த மழை , காற்று மற்றும் மின்னல் ஆகியவை விமான போக்குவரத்தை மிகவும் பாதித்தது.
ஆனால் அதிகாலை மீண்டும் வழக்கமான விமான சேவைகள் துவங்கியது. திசை திருப்பப்பட்டு 11 விமானங்களில் 7 உள்நாட்டு விமானங்கள் மற்றும் நான்கு வெளிநாட்டு விமானங்களாகும். டெல்லியிலிருந்து வந்த இரண்டு மும்பையிலிருந்து வந்த இரண்டு மற்றும் கோவா மற்றும் கௌஹாத்தியிலிருந்து வந்த தலா இரண்டு விமானங்கள் திசை திருப்பப்பட்டன. இந்த விமானங்கள் இண்டிகோ , ஏர் இண்டியா , ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் , விஸ்தாரா ஆகாசா ஏர் மற்றும் அல்லையன்ஸ் ஏர் ஆகிய நிவனங்களுக்கு சொந்தமானவை பாரிஸ் , ஆம்ஸ்டெர்டாம் மற்றும் பாங்காக்கிலிருந்து இரண்டு சர்வதேச விமானங்கள் சென்னைக்கு திருப்பப்பட்ட ன . இதே போல் மே 10 அன்றும் இதே நிலையால் 17 விமானங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டன. தவிர விமான நிலைய கூரைகளில் தண்ணீர் ஒழுக்களும் இருந்தது. மற்றபடி வேறெந்த விமானங்களும் தாமதமோ ரத்தோ செய்யப்படவில்லை.