மழை குறைவால் பெங்களூரில்வெப்பம் அதிகரிப்பு

பெங்களூர் : ஆகஸ்ட். 16 – நகரில் இம்மாதங்களில் பெய்யும் வழக்கமான அளவைவிட இந்தாண்டு 40 சதவிகிதம் அளவிற்கு குறைவாக பெய்துள்ளது . இதன் விளைவாய் நகரில் தற்போது உஷ்ணம் அதிகரித்துள்ளது. இதனால் வியர்வை வரவைக்கும் அளவிற்கு நகரில் வறண்ட நிலை நிலவுகிறது. இந்த மழை குறைபாடால் இரண்டு வாரங்களாக நகரில் உஷ்ண நிலை அதிகரித்தபடியே உள்ளது. இந்திய வானிலை ஆய்வு நிலைய கணிப்புப்படி இந்த நிலை நகரில் மேலும் சிலவாரங்களுக்கு தொடரவுள்ளதாகவும் மாநிலத்தின் ஓரொரு இடங்களில் மட்டும் சாமான்ய மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழைகள் பலவீனமடைந்துள்ளன தென் கர்நாடகா பகுதிகளான கடலோர மற்றும் உள்பகுதிகளில் சில நாட்களுக்கு முன்னர் மழைகள் பெய்திருப்பினும் அவை அனைத்தயும் வழக்கத்துக்கு குறைவானவையே பெங்களூரு நகர் பகுதியில் வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் முதல் வாரத்தில் பதிவாகும் 24.3 மி மீ மழையை விட இந்த ஆண்டு குறைவாக வெறும் 10.8 மி மீ மழை மட்டுமே பெய்துள்ளது. ஆகஸ்ட் 5 வரை நகரில் உஷ்ண நிலை 26 முதல் 27 டிகிரீயாக இருந்தது. தற்போது இதுவே 29 முதல் 30 டிகிரீயாக உயர்ந்துள்ளது. இப்படி மேகசூழல் மற்றும் உஷ்ண அதிகரிப்பு நிலையால் நகரில் உருவாகியுள்ள 80 சதவிகித உஷ்ணத்தால் தற்போது வியர்க்கும் அளவிற்கு நகரில் உஷ்ணமும் அதிகரித்துள்ளது. ஆனாலும் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் மழை அதிகரிக்கும் வாய்ப்புள்ள நிலையில் நகரின் உஷ்ண நிலையம் குறைய வாய்ப்புகள் உள்ளது. என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.