பெங்களூர்: ஆகஸ்ட். 6 – மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ள மாநில அரசு 200 கோடி ரூபாய்களை வெளியிட்டுள்ளது . மழையால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ள 21 மாவட்டங்களுக்கு 200 கோடி ரூபாய்கள் வெளியிட முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். பெல்லாரி , சிக்கமகளூர் , சித்ரதுர்கா , தக்ஷிண கன்னடா , தாவணகெரே , தார்வாட் , கதக் , ஹாசன் , ஹாவேரி , கொப்பலா , ஹாசன் , மண்டியா , துமகூரு , சிவமொக்கா , உடுப்பி , உத்தரகன்னடா , விஜயநகர் , மைசூர் , சாமராஜநகர் , கோலார் மற்றும் சிக்கபள்ளாபூர் மாவட்டங்களுக்கு நிவாரண தொகைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜுலை மற்றும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாநிலம் முழுக்க வழக்கத்திற்கு மாறாக பெரும் மழை பெய்துள்ளதால் வெள்ள அபாயங்கள் ஏற்பட்டுள்ளது. தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதுடன் இவற்றிற்கான நிவாரணப்பணிகளை மேற்கொள்ள உடனடியாக நிதியை வெளியிடுமாறு மாவட்ட ஆட்சியாளர்கள் அளித்துள்ள கோரிக்கைகளை ஏற்று இயற்க்கை சீற்ற நிவாரணத்தொகை நிதியிலிருந்து 200 கோடி ரூபாய்களை உடனடியாக வெளியிடுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.