மழை பாதிப்பு நிவாரணத்திற்கு 500 கோடி ரூபாய்

பெங்களூர் : ஜூலை. 15 – மாநிலத்தில் மழை மற்றும் புயலால் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இவற்றிற்க்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று அதிகாரபூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். தேவனஹள்ளியின் தனியார் ரிசார்ட்டில் மழை மற்றும்வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் காணொளி காட்சி வாயிலாக கூட்டம் நடத்தி மழை பாதிப்புகளால் அடிப்படை வசதிகள் சேதமடைந்திருப்பது குறித்து அறிக்கைகளை பெற்று கொண்டார். உடனே அடிப்படை வசதிகளை புனரமைக்கும் திட்ட பணிகளுக்கு 500 கோடி வெளியிட்டு உத்தரவு பிறப்பித்தார். கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தபடி உள்ளது. இதனால் பல மாவட்டங்களில் பல்வேறு தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளன. அடிப்படை வசதிகளான சாலைகள் , பாலங்கள் , பள்ளிக்கூடங்கள் , அங்கணவாடி மையங்கள் , மின் கம்பங்கள் ஆரம்ப சுகாதார கட்டிடங்களின் சேதங்கள் குறித்து மாவட்ட ஆட்சியினர் தகவல் தெரிவித்திருப்பதாக முதல்வர் கூறினார். கடந்த சில நாட்களாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயணம் மேற்கொண்டுள்ளேன். அந்த சமயத்தில் இந்த பாதிப்புகளை நான் நேரில் கண்டுள்ளேன். எனவே அவசர கதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளும் மேற்கொள்ளவேண்டியுள்ளது என தெரிவித்தார்.