மழை முன் எச்சரிக்கை – நடவடிக்கை மாநகராட்சி தீவிரம்

பெங்களூர். ஏப். 20 – நகரில் எதிர்வரும் தேர்தல் மற்றும் அதை தொடர்ந்து வரும் மழைக்காலம் தொடர்பாக பெங்களூர் கிரேட்டர் மாநகராட்சி அடுத்து இரண்டு வாரங்கள் நகரின் பல பகுதிகளில் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி தூயமை படுத்துதல் , மற்றும் மழைநீர் சாக்கடைகளை தூர் வாருதல் போன்ற பணிகள் குறித்து தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ள உள்ளது. இது எதிர்வரும் மழைக்காலத்திற்கான முன்னேற்பாடுகள் என்றாலும் இதற்கு பாராளுமன்ற தேர்தலும் ஒரு காரணமாகும். இந்த வகையில் சம்மந்தப்பட்ட துறைகளுக்கான உள் உத்தரவில் நகரின் குப்பைகளை அகற்றுவது கழிவுகளை நீக்குவது ,குப்பைகளை அகற்றவும் தலைமை பொறியாளர்கள் பொறுப்பேற்கவேண்டும் என தெரிவித்துள்ளது. தவிர பொறியாளர்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள் கலந்து கொண்ட ஊழியர்கள் , இடங்கள் அகியவற்றை கால நேர பதிவுடன்வீடியோ மற்றும் புகைப்படங்களை சமர்ப்பிக்குமாறும் தெரிவித்துள்ளது. மாநகராட்சியின் பணிகள் வெறும் நகர எல்லைக்கு உள்பட்டது மட்டுமே என்றாலும் இந்த 15 நாள் பிரசாரம் நகரின் மழைநீர் கால்வாய்கள் ,
சாலையோர மழைநீர் கால்வாய்கள் , சாக்கடைகள் ஏரிகள் மற்றும் வீதிகளை துப்புரவு படுத்த மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கைகளாகும். மழைநீர் கால்வாய்களில் தண்ணீர் சுமுகமாக ஓடும் வகையில் அவற்றை சரிப்பார்க்கவேண்டும் என பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தக்காரர்கள் ஏற்கெனவே மாநகராட்சி பணிகளில் ஈடுபட்டுள்ளதால் இதற்க்கு பட்ஜெட் பெரிய விஷயம் இல்லை. நகர வீதிகளை பராமரிக்க 47.85 கோடிகள் , மேம்பாலங்கல் பாலங்கள் சுரங்கபாதைகளை பராமரிக்க பார்க்க 31.29 கோடிகள் , மற்றும் 181 கோடிகள் வார்டுகளில் வீதிகள் மற்றும் நடைபாதைகள் பராமரிப்பதற்கும் தவிர சாலையோர சாக்கடைகளை துப்புறப்படுத்தவும் இந்தாண்டு 2024-25 நிதியாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மழைநீர் கால்வாய்களை தூர்வார மட்டுமே 36.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. என மாநகராட்சி குறிப்பு தெரிவிக்கிறது.