
சென்னை,செப்டம்பர் 8- சென்னையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகளில் காற்று வேகமாக வீசியதுடன், மழை வெளுத்து வாங்கியது. கனமழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், கனமழை எதிரொலியாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் 6 சர்வதேச விமானங்கள் உட்பட 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் வந்த பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.