மஹா.,வில் மீண்டும் ஊரடங்கு; அம்பானி மகன் ஆவேசம்


புதுடில்லி, ஏப். 8- மஹாராஷ்டிராவில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால் அங்கு பகுதி நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலதிபர் அனில் அம்பானியின் மூத்த மகன் அன்மோல் அம்பானி 29, சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன் விபரம்: நடிகர்கள் இரவு நேரங்களில் ‘ஷூட்டிங்’ நடத்தலாம்; கிரிக்கெட் வீரர்கள் இரவு நேரத்தில் விளையாடலாம்; அரசியல்வாதிகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பேரணிகள் ஊர்வலங்கள் நடத்தலாம். ஆனால் மக்களுடைய தொழில் வேலை அரசுக்கு அத்தியாவசியமாக இல்லை. இந்த ‘அத்தியாவசியம் இல்லாத’ தொழில்கள் வேலைகள் தான் நாட்டின் சமூகத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.