மாடியில் இருந்து கீழே தள்ளி காதலி கொலை : காதலன் கைது

பெங்களூர் : மார்ச். 14 – கோரமங்களாவில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றின் மேலிருந்து விழுந்து விமான பணிப்பெண் அர்ச்சனா என்பவர் இறந்திருப்பதுடன் இது தற்கொலை அல்ல கொலை என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அர்ச்சனாவின் காதலன் ஆதேஷ் என்பவன் அவளை அபார்ட்மென்டின் நான்காவது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்துள்ளான். இது சம்மந்தமாக போலீசார் ஆதேஷுக்கு எதிராக இ பி கோ 302 பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர் . இது சம்மந்தமாக ஆதேஷ் கைது செய்யப்பட்டுள்ளான் . இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அர்ச்சனா மற்றும் கேரளாவை சேர்ந்த ஆதேஷ் இருவரும் டேட்டிங் ஆப் வாயிலாக அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர். அர்ச்சனா துபாய் விமானத்தில் விமான பணிப்பெண்ணாய் வேலை செய்து வந்தார் . ஆதேஷ் நகரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தான். இப்படி ஆதேஷை சந்திக்க அர்ச்சனா துபாயிலிருந்து நகருக்கு வந்துள்ளாள். ஆனால் கடந்த 11 அன்று அர்ச்சனா ஆதேஷ் தங்கியிருந்த அபார்ட்மென்டின் நான்காவது மாடியில் இருந்து விழுந்துஇறந்துள்ளாள். பின்னர் அவள் போதையில் மாடியிலிருந்து விழுந்து இறந்ததாக ஆதேஷ் அர்ச்சனாவின் தந்தைக்கு போன் செய்து தெரிவித்துள்ளான். தவிர பொலிஸாரிடமும் இதையே தெரிவித்தான். ஆனால் அர்ச்சனா தற்கொலை செய்து கொள்ள வில்லை ஆதேஷை அவளை கொலை செய்துள்ளதாக அவளுடைய பெற்றோர் கூறிய புகாரை வைத்து போலீசார் விசாரணை நடத்தி ஆதேஷை கைது செய்துள்ளனர்.