மாடியில் இருந்து விழுந்து குழந்தை சாவு

பெங்களூர் : மார்ச் 15 – கட்டிடம் மேலிருந்து கீழே விழுந்து ஒன்றரை வயதே ஆன குழந்தை இறந்துள்ள சம்பவம் சாம்ராஜ்பேட்டையின் அசாத் நகரின் இரண்டாவது குறுக்கு தெருவில் நடந்துள்ளது. தீக்ஷ என்ற பெயர் கொண்ட குழந்தை விஜய் என்பவரின் மகளாவாள். தீக்ஷ தன் உறவினரின் வீட்டுக்கு வந்திருந்த வேளையில் இந்த விபத்து ஏற்பட்டு குழந்தை பலத்த காயமடைந்தது.
உடனே அவளை மருத்துவமனைக்கு எடுத்து சென்றும் வழியிலேயே குழந்தை இறந்துள்ளது .
இரவு ஒன்பது மணியளவில் குழந்தைக்கு உணவு ஊட்டிகொண்டிருந்த அவளுடைய தாய் விளையாடிக்கொண்டே க்ரில் மீது எறியுள்ளது. பின்னர் தாயின் கண் முன்னரே குழந்தை கீழே விழுந்துள்ளது .
இந்த சம்பவம் குறித்து சாமராஜ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.