மாடு மேய்க்கும் போது புலி தாக்கியதில் விவசாயி படுகாயம்

மைசூர் : நவம்பர். 1 – இந்த மாவட்டத்தில் காட்டு யானைகள் மனிதர்களுக்கிடையேயான மோதல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நஞ்சன்கூடு தாலூக்காவின் மஹதேவா நகரின் புறப்பகுதியில் விவசாயி ஒருவரை புலி தாக்கியுள்ளது. கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி வீரபத்ரா (70)என்பவரை புலி தாக்கியதில் அவர் படு காயங்கலடைந்து மாவட்ட மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். வீரபத்ரா பண்டீபுரா தேசிய பூங்கா அருகில் மஹதேவ நகரில் ஜேனு கட்டே என்ற இடத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது பசு மற்றும் கன்றை புலி தாக்கியுள்ளது. அப்போது பசுவை காப்பாற்ற முயன்ற வீரபத்ரா மீதும் புலி தாக்கியுள்ளது. ஆனால் அவருக்கு படுகாயங்களடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு ஹடியாளா வன துறை அதிகாரி நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் படு காயங்கலடைந்துள்ள வீரபத்ரா விற்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என கிராமத்தார் வற்புறுத்தி வருகின்றனர்.