மாட்டின் வயிற்றில்30 கிலோ பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் பொருட்கள் இயற்கைக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டுதான் வருகிறது. சிறிய பொருட்கள் வாங்கினாலும், அதற்கு பிளாஸ்டிக் பேக் கேட்பவர்கள், அதை பொது வெளியில் வீசி எறிந்துவிடுகின்றனர். மக்காத இந்த பிளாஸ்டிக் மண்ணில் புதைந்து நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்படுகிறது. மேலும், கால்நடைகளை அதில் ஒட்டியிருக்கும் உணவு பொருட்களை உண்பதுடன், அந்த பிளாஸ்டிக் பேக்குகளையும் சேர்த்து உண்கிறது. இதனால் ஜீரணம் ஆகாமல் வயிற்றிலேயே தங்கி ஆபத்தை ஏற்படுத்துகிறது.அப்படி ஒரு சம்பவம் ஒடிசாவில் நடைபெற்றுள்ளது. சாலையில் அலைந்து திரிந்த ஒரு மாட்டின் வயிறு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியதால், உடல் நலமின்றி காணப்பட்டுள்ளது. அந்த மாட்டை கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்த டாக்டர்கள் வயிறுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் உள்ளதை கண்டுபிடித்து, அறுசை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அறுவை சிகிச்சை செய்தபோது, வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவு வந்து கொண்டே இருந்துள்ளது. சுமார் 30 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றில் இருந்து வெளியே எடுத்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் இதுபோன்று கடந்த வருடம் ஒரு மாட்டின் வயிற்றில் இருந்து 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் எடுத்ததாக தெரிவித்தனர்.

https://www.maalaimalar.com/news/national/doctors-remove-30-kg-of-plastic-from-stomach-of-cow-in-odisha-644817
https://www.maalaimalar.com/news/national/doctors-remove-30-kg-of-plastic-from-stomach-of-cow-in-odisha-644817