மாட்டிறைச்சி கடத்திய வாகனங்களுக்கு தீ வைப்பு

பெங்களூர் : செப்டம்பர் . 24 – சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திய வாகனத்திற்குஸ்ரீராமா சேனை தொண்டர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் தொட்டபள்ளாபுறாவில் இன்று அதிகாலை நடந்துள்ளது.
நகரின் ஐ பி ரவுண்டானாவில் ஆந்திர பிரதேசத்தின் ஹிந்துபுரா மார்க்கத்திலிருந்து கௌரிபிதனூர் -தொட்டபள்ளாபுறா மார்கமாக சிவாஜிநகருக்கு மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்ட நிலையில் இந்த காரை தடுத்து நிறுத்தியும் அது நிற்க வில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஹிந்து ஆதரவு இயக்கத்தினர் காரின் கண்ணாடியை உடைத்து தூள் தூளாக்கி காரில் இருந்த மாட்டிறைச்சியை சாலையில் வீசி எறிந்தனர். இதே வேளையில் நான்கு பொலேரோ வாகனங்கள் மற்றும் 1 மினி வேன் வாயிலாக மாட்டிறைச்சிகள் கடத்தி வந்திருப்பதுடன் அந்த வாகனங்களுக்கு முன்னர் பாதுகாப்பு வாகனம் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஐந்து வாகனங்களையும் தடுத்து நிறுத்திய ஸ்ரீ ராம சேனே தொண்டர்கள் அவர்களின் தளி மீது மாட்டு தலையை வைத்து ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்கள் எழுப்புமாறு வற்புறுத்தியுள்ளார்.
அப்படியும் கோஷங்கள் எழுப்பாதவர்களை தடியால் உதைத்துள்ளனர். பின்னர் கார்களுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திய குற்றவாளிகளை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.