மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்

கோவை: நவம்பர். 21 – கோவையில் நிகழ்ந்த திருமணம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிது. இந்த புதுமண தம்பதிகளுக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வு என்பதால்தான், இந்த திருமணத்துக்கு ஏழ்மையில் உள்ளவர்களும் கடன்வாங்கியாவது கல்யாணத்தை செய்வார்கள்.ஆடம்பர திருமணம்: வசதியில்லாதவர்களே இப்படி என்றால், வசதி படைத்தவர்களின் ஆடம்பரத்தை சொல்லவே தேவையில்லை.. வகைவகையான ஆடம்பரங்கள், தினுசுதினுசான நகைகள், பகட்டான சீர்வரிசைகள் என கண்களை பறித்துவிடும். . மணமக்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவதும், சாரட் வண்டிகளில் ஊர்வலமாக போவதும் என எத்தனையோ அமர்க்களமான திருமணங்களை நாம் கண்டுள்ளோம்..மாட்டுவண்டிகள்: இதில் பெரிதும் ஆச்சரியங்களை கிளப்புவது மாட்டு வண்டி ஊர்வலம்தான்.. இன்னமும்கூட நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும்வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசைகளை வைத்து ஊர்வலம் செல்வது அதிகரித்து வருகிறது.. சில நாட்களுக்கு முன்புகூட, மதுரை உசிலம்பட்டியில் ஒரு காதணி விழா நடந்து, சுற்றுவட்டார மக்களையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது..