மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக3 பேர் கைது

பெங்களூரு, அக். 12: தமிழ்நாடு ஜோலார்பேட்டையில் ஜூலை மாதம் ஓடும் ரயிலில் இருந்து குதித்து 21 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹேமந்த் குமார் கவுடா, ரவிக்குமார் மற்றும் தீக்ஷித் கவுடா ஆகிய 3 பேரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். பெங்களூரு அருகே உள்ள‌ சந்தாபுராவில் வசிப்பவர்கள். இறந்தவர் தொட்டஸ்ரீ மணிகண்டா, பெங்களூரு எச்எஸ்ஆர் லேஅவுட்டில் உள்ள அகராவில் வசிப்பவர் மற்றும் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் எச்எஸ்ஆர் லேஅவுட் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தனது வகுப்புத் தோழியான சந்தாபுரத்தைச் சேர்ந்த பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரைக் காதலித்து, அவர்கள் ஒன்றாக வசித்து வந்தனராம்.
இந்த நிலையில் மூன்று மாதங்களாக அனு தனது சொந்த வீட்டிற்கு செல்லவில்லையாம். கைது செய்யப்பட்ட நபர்கள் 3 பேரும் அனுவின் உறவினர்கள். எனவே அவர்கள் அனுவைத் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி அகராவில் உள்ள‌ வீட்டில் மணிகண்டாவுடன் அனுவைக் பார்த்த அவர்கள், இருவரையும் சந்தாபுராவிற்கு அழைத்துச் சென்று, ஒரு அறையில் மணிகண்டனைப் பூட்டித் தாக்கியதாக கூறப்படுகிறது. அடுத்த நாள், அனுவுடனான உறவைத் தொடர வேண்டாம் என்று எச்சரித்து அவரை மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுள்ள‌னர். மணிகண்டன் தன் தாயிடம் நடந்த சம்பவத்தை கூறிவிட்டு ரயிலில் அனந்தபூருக்கு சென்றுள்ளார். ஜோலார்பேட்டையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், இறந்தவரின் அடையாளத்தை கண்டுபிடித்து, அவரது தாயை தொடர்பு கொண்டனர். மணிகண்டா தனது கடைசி இடத்தை அவருக்கு அனுப்பியிருந்தார். மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மொபையில் போனில் தாயை அழைத்திருந்தார். அவரது தாயின் புகாரின் பேரில், மணிகண்டாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் மூவரும் தலைமறைவாக இருந்தனர். மூவரும் மணிகண்டாவை அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்றதால் ஜோலார்பேட்டை போலீசார் இந்த வழக்கை, பெங்களூரு எச்எஸ்ஆர் லேஅவுட் போலீசாருக்கு அண்மையில் மாற்றினர்.மணிகண்டனின் மரணம் குறித்து தகவல் அறிந்த அனு ஜோலார்பேட்டைக்கு சென்று கைது செய்யப்பட்ட‌ மூவருக்கு எதிராக போலீசில் வாக்குமூலம் அளித்தார். மணிகண்டனின் தாய், அனு ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மூவரையும் போலீஸார் கைது செய்தனர். ஹேமந்த் ஒரு ஆய்வகத்தில் வேலையும், தீக்ஷித் ஒரு டிராவல் ஏஜென்சியையும், ரவி டிஷ் கேபிள் டிவியில் வேலையும் பார்த்து வந்தனர்.