மாணவர் தற்கொலை

தக்ஷிண கன்னடா: ஜூன் . 12 – தன்னுடைய தாயாரின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்க மொத்த நாளும் ஹாஸ்டெல் வார்டன் மொபைலை கொடுக்காததால் மனம் நொந்த மாணவன் மரண வாக்குமூலம் எழுதி வைத்து விட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் உள்ளாலில் உள்ள கின்யா சாரதா வித்யா நிகேதனில் நடந்துள்ளது. பெங்களூரு கிராமத்தார மாவட்டத்தின் ஹோசகோட்டே தாலுகாவை சேர்ந்த பதினான்கு வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட மாணவநாவான் . கடந்த பதினோராம் தேதி மாணவனின் தாயின் பிறந்தநாளாகும் . வீட்டில் உள்ளவர்களுடன் பேச மொபைலை கேட்ட போது பள்ளி நிர்வாகத்தின் சட்டப்படி ஹாஸ்டெல் காப்பாளர் மொபைல் போன் தர மறுத்துள்ளார். தவிர மாணவனின் வீட்டாரும் மாணவனை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும் அவனை தொடர்பு கொள்ள முடிய வில்லை. இரவு பன்னிரண்டு மணிவரை பைத்தியம் பிடித்ததுபோல் உட்கார்ந்திருந்த மாணவன் ஹாஸ்டெல் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளான் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தவிர தற்கொலை செய்து கொண்ட மாணவன் மரண வாக்குமூலமாக எழுதியுள்ள கடிதத்தில் தாய்க்கு பிறந்த தின நல்வாழ்த்துக்கள். அனைவரும் சந்தோஷமாக இருங்கள் . பள்ளிக்கூடத்தில் எனக்காக கட்டியுள்ள கட்டணத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களிடமிருந்து நான் மிகவும் தொலைவில் உள்ளேன். நீங்கள் என்னை துக்கத்தில் தள்ளினீர்கள். தவிர யாரும் கூக்குரலிட்டு அழ வேண்டாம் என மாணவன் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கடிதம் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இந்த தற்கொலை குறித்து தெரியவந்தவுடன் உள்ளால் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றியிருப்பதுடன் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.