மாணவிகள் மீது ஆசிட் வீச்சு மேலும் இரண்டுபேர் கைது

மங்களூர் : மார்ச். 13 – மாநிலத்தையே உலுக்கிய இம்மாவட்டத்தின் கடபு தாலூக்காவின் அரசு கல்லூரியில் மூன்று மாணவிகள் மீது அமிலம் வீசிய விவகாரம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் 5 அன்று அமில தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளி கேரளாவை சேர்ந்த எம் பி ஏ மாணவன் அபின் என்பவனை கைது செய்திருந்த போலீசார் கேரளாவை சேர்ந்த மேலும் இரண்டு பேரை தங்கள் வசம் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உப்பினன்கடி ரவுண்டானா அருகில் குற்றவாய்களிடம் விசாரணை அதிகாரிகள் சேர்ந்து கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் தமிழ் நாட்டின் கோயமுத்தூர்பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கேரளாவிலிருந்து இரண்டு பேரை கடபாவிற்கு அழைத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. குற்றவாளி அபினுக்கு அமிலம் கொண்டு வந்து கொடுத்த நபரையும் போலீசார் தங்கள் வசம் எடுத்துள்ளனர். இந்த தாக்குதல் நடந்த அன்று கல்லூரியில் சீருடை தைக்கும் நபரையும் போலீசார் தங்கள் வசம் எடுத்துள்ளனர். குற்றவாளி ஆன் லைன் வாயிலாக அமிலம் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.மார்ச் aஐந்து அன்று மூன்று கல்லூரி மாணவிகள் மீது அமிலம் வீசிய குற்றவாளி அபின் பிளாஸ்டிக் பாட்டிலில் கொண்டு வந்து ஒரு மாணவி மீது அமிலம் வீச போய் அது அவள் பக்கத்தில் இருந்த மேலும் இருவர் மீதும் பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த மூன்று பி யு கலோரி மாணவிகளுக்கும் மங்களூரில் ஏ ஜி மருத்டுவமணியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் இரண்டு பேருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யவேண்டியது அவசியமாகியுள்ளது .