மாணவி தற்கொலை

விஜயபுரா : நவம்பர். 10 – தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வந்ததால் மனம் நொந்த செவிலியர் மாணவி ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள சோக சம்பவம் சடசண என்ற இடத்தில் நடந்துள்ளது. விஜயபுராவின் நெசவாளர் காலனியில் வசித்து வந்த கீர்த்தனா மதுகர் (21) தற்கொலை செய்து கொண்ட மாணவியாவார். பி எல் டி இ நர்ஸிங்க் கல்லூரியில் இவர் படித்துவந்துள்ளார். தேர்வின் முடிவுகள் வந்த போது இவர் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்கள் வந்திருக்கவில்லை . இதனால் மனம் நொந்த மாணவி கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சடசண போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.