மாநகராட்சியில் புதிதாக225 வார்டுகள்

பெங்களூரு, ஆக. 19: பெங்களூரு மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 225 வார்டுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
பெங்களூரு மாநகராட்சி (பிபிஎம்பி) புதிதாக உருவாக்கப்பட்ட 225 வார்டுகளை மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. எல்லைகள் குறித்த ஆட்சேபனைகளை தெரிவிக்க பொதுமக்களுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆட்சேபனைகளை பின்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கலாம். கூடுதல் தலைமைச் செயலாளர், நகர்ப்புற வளர்ச்சித் துறை, 4வது தளம், விகாஸ் சவுதா, பெங்களூரு 560001.
ஜூன் 19 ஆம் தேதிய‌ன்று உயர் நீதிமன்றம், சட்டத்தின் தொடர்புடைய விதிகளை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம் பெங்களூரு மாநகராட்சியில் உள்ள எல்லை நிர்ணய செயல்முறையின் புதிய செயல்பாட்டை மேற்கொள்ள மாநில அரசுக்கு 12 வார கால அவகாசம் வழங்கியது.
புதிய அறிவிப்பின் மூலம், பாஜக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட 243 வார்டுகள் மறுவரை செய்யப்பட்டு, 225 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பிபிஎம்பிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அரசு பகிரங்கமாக உறுதியளித்துள்ளது. பெங்களூரில் செப்டம்பர் 2020 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்றம் இல்லை. பெங்களூரு மாநகராட்சி வரலாற்றில் கவுன்சில் இல்லாத நீண்ட காலம் இதுவாகும்.
புதிதாக உருவாக்கப்பட்ட வார்டுகளின் பட்டியல் erajyapatra.karnataka.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்