மாநகராட்சி உறுப்பினரின்சகோதரர் வெட்டிக் கொலை

மைசூரு, மார்ச் 9: மைசூரு உதயகிரி மாடகவுடா வட்டம் அருகே மகாநகர மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினரின் சகோதரர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
மைசூரு மாநகராட்சி உறுப்பினரான பாண்டுவின் சகோதரர் அக்மல்லை, ஐந்திற்கும் மேற்பட்டோர் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இந்த கொலையை பெங்களூரை சேர்ந்த நபர்கள் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட நபர் அக்மல், எஸ்டிபிஐ அமைப்பில் அடையாளம் காணப்பட்டு, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சொத்துக்காக கொலை:
குர்மத்கல் தாலுகாவில் உள்ள சந்திரகி அருகே பட்டப்பகலில் ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சொத்து பிரச்னை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகமடைந்த குர்மத்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சந்திரகி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மலு (48) என்பவர் கொலை செய்யப்பட்டவர். சந்திரகி கிராமத்தின் முக்கியச் சாலையில் பட்டப்பகலில் இந்தக் கொலை நடந்துள்ளது. சொத்துப் பிரச்னை காரணமாக நரசிம்மலு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் குர்மத்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.