மாநகராட்சி குப்பைலாரி மோதி வாலிபர் பலி

பெங்களூர் : செப்டம்பர் . 23 – பெங்களூரு மாநகராட்சி குப்பை அகற்றும் லாரிக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பி பி எம் பி குப்பை அகற்றும் லாரி மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ள சம்பவம் ஜெயநகரில் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது . கனகபுரா தாலூகாவின் கல்லிகௌடனதொட்டியின் ஜெயலிங்கா (26) என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்தவர். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதில் அதே இடத்தில் இளைஞன் இறந்துள்ளதாக டி சி பி சிவப்ரகாஷ் தேவராஜ் தெரிவித்துள்ளார் . இறந்து போன இளைஞன் பன்னேர்கட்டா வீதியில் உள்ள பாய் ஷோ ரூமில் டெலிவரி பாயாக பணியாற்றிவந்துள்ளான். இவனுக்கு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி ஏழு மாத குழந்தை உள்ளது. ஜெ பி நகரின் ஏழாவது ஸ்டேஜில் எள்சேனஹள்ளியில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஜெயலிங்கா தன்னுடைய மனைவி ஊருக்கு சென்ற நிலையில் தனியாக வசித்து வந்திருந்தார். பனசங்கரியிலிருந்து சவுத் எண்ட் சர்க்கிள் மார்கமாக சென்றுகொண்டிருந்த ஜெயலிங்கா நேற்று இரவு 12 35 மணியளவில் வேகமாக தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது ஜெயநகரில் நிறுத்துவிதைக்கப்பட்டிருந்த குப்பை லாரியில் மோதி அதன் அடியில் மோட்டர் சைக்கிளுடன் சிக்கி இறந்துள்ளார். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயநகர் போக்குவரத்து போலீசார் 3 – 4 நான்கு மணி நேர போராட்டத்ரிக்கு பின்னர் இறந்த உடலை வெளியே எடுத்துள்ளனர் . ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் திருமணமாகி தற்போது கர்பவதியாகியுள்ள மனைவியை இழந்துள்ள ஜெயலிங்காவின் உடலை பார்த்து உறவினர்கள் அலறி கதறியது நெஞ்சை உருக்கும் படியாக இருந்தது.