மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் தீ விபத்து10 பேர் காயம்

பெங்களூரு, ஆகஸ்ட் 11- பெங்களூர் மாநகராட்சி தலைமை அலுவலக வளாகத்தில் இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காயமடைந்தனர்.


அலுவலக வளாகத்தில் உள்ள தரக்கட்டுப்பாட்டு பிரிவின் ஆய்வகம் மற்றும் அலுவலக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், அரை மணி நேரம் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை முற்றாக அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


இந்த சம்பவத்தில் மாநகராட்சியின் 10க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் செயின்ட் மார்த்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்
மாநகராட்சி தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார், போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்