மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை

பெங்களூர், பிப்.2-
பெங்களூர்மாநகராட்சியின் கீழ் கழிவு மேலாண்மை 89 பேக்கேஜ்களில் அழைக்கப்பட்ட டெண்டர்கள் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
இந்த டென்டரில் 243 வார்டுகளில் 89 பேக்கேஜ் களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேக்கேஜிலும் ரெண்டு மூன்று வார்டுகள் உள்ளன. இருப்பினும் செப்டம்பர் 25, 2023 ம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிவிப்பில், அரசாங்கம் 243 வார்டுகளை ரத்து செய்ய வேண்டும்.225 வார்டுகளை உருவாக்குவது, இதனால் 243 வார்டுகள் பேக்கேஜில் மாநகராட்சிக்கு நிதி சுமை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் பி.எஸ்.டபிள்யு. எம். சி. நிறுவனம் 541 கோடி மதிப்பிலான டெண்டரை விரைந்து முடிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெங்களூர் திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் என்ற பி.எஸ்.டபிள்யூ.எம். எல். நிறுவனம் செப்டம்பர் 2002ல் 89 பேக்கேஜ்களில் முதன்மை கழிவு சேகரிப்பு, போக்குவரத்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரண்டாம் நிலை கழிவு பிரிப்பு உள்ளிட்ட அனைத்து வகையான கழிவு மேலாண்மைக்கு டெண்டர்கள் அழைத்தது.அப்போது தொழில் நுட்ப ஏலம் திறக்கப்பட்டபோது, ஏலம் எடுத்த பலர் தகுதி பெறாததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.2023 ஜூன் இரண்டாவது முறையாக டெண்டர் கோரப்பட்டது. தகுதி சுற்றில் சிலர் அற்ப காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், இந்த விவகாரம் நீதிமன்றத்தை எட்டியது.சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள், வார்டு மறு பகிர்வு முடிந்ததும், டென்டருக்கான ஏலத்தை திறக்க பி.எம்.டபிள்யூ.எம். எல்., தயாராக உள்ளது.243 வார்டுகளுக்கு 89 பேக்கேஜ்களில் 541 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் கோரப்பட்டது. இப்போது அதை தவிர மேலும் 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஏலம் எடுத்துள்ளனர்.அந்த தொகைக்குபிஎஸ்டபிள்யுஎம்எல் குத்தகைய விட முன்வந்துள்ளது.முந்தைய பிஜேபி ஆட்சி அதிகாரிகள் தயாரித்த 89 பேக்கேஜ்களில் டெண்டர் பிஜிஎம்டபிள்யூ எல் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க உள்ளனர். அக்கால அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் வழங்குவதற்கான தொகுப்புகளை உருவாக்கினர்.இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது காங்கிரஸ் அரசும் கூட
பிஎஸ் டபிள்யு எம் எல் வசீகரத்தில் விழுந்து முந்தைய டென்டருக்கு ஒப்புதல் அளிக்க தயாராகி உள்ளது என தெரிய வந்துள்ளது.