மாநகராட்சி தீ விபத்து – தலைமை பொறியாளர் சிகிச்சை பலனின்றி பலி

பெங்களூரு, ஆக.30-
பெங்களூர் மாநகராட்சி தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள ‘தரக்கட்டுப்பாட்டு’ ஆய்வகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த தலைமை பொறியாளர் சிவக்குமார் (45) இன்று உயிரிழந்தார். தீ விபத்தில்
காயமடைந்த 9 பேரில், மீதமுள்ள 8 பேர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், சிவக்குமார் உடல்நிலை மோசமடைந்ததால் சேஷாத்ரிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
40 சதவீத தீக்காயங்களுடன் பலத்த காயமடைந்த சிவக்குமார், மாநகராட்சி தரக் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்தார். சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் இன்று அவர் உயிரிழந்தார். சிவக்குமார் மறைவுக்கு துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் இரங்கல் தெரிவித்து உள்ளார். சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தேன். டாக்டர்கள் நல்ல சிகிச்சை அளித்தாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அவர் குணமடைய பிரார்த்தனை செய்தோம். எங்கள் பிரார்த்தனை பலிக்கவில்லை என்று துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் துயரத்துடன் குறிப்பிட்டு உள்ளார்