
பெங்களூரு, ஆகஸ்ட் 4- மாநகராட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் பரிந்துரை செய்து இருப்பதால் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூர் நகரில் உள்ள லால்பாக்கில் நடந்த சுதந்திர தின மலர் கண்காட்சியை துவக்கி வைத்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.12 வாரங்களுக்குள் வார்டை பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு, மாநகராட்சிதேர்தலை நடத்த நீதிமன்றம் பரிந்துரைக்கிறது. எனவே தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என்றார்.