மாநகராட்சி நிதிக்குழு மானியத்திற்கு ஒப்புதல்

பெங்களூர், டிச.15-
பெங்களூர் மாநகராட்சி 2022 -23 ம் ஆண்டுக்கான 15 வது நிதி குழு மானியம், செயல் திட்டத்திற்கு முந்தைய பிஜேபி அரசு வெளியிட்ட 291 கோடி ரூபாய் திட்டத்திற்கு, நிபந்தனைகளுடன்
அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பெங்களூர் மாநகராட்சியில் குடிநீர் வழங்கல், சுகாதாரம், ஏரி புனரமைப்பு, திடக்கழிவு மேலாண்மை, ஆகியவைகளுக்கு 2023 மே 25-ல் நிதி விபரம் வெளியிடப்பட்டது.
அதன்படி செப்டம்பர் 6ல் மாநகராட்சி தலைமை ஆணையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேவையான பணிகளுக்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டது.
அதனை அரசுக்கு சமர்ப்பித்தனர்.
டிசம்பர் 11ம் தேதி ‘மைக்ரோ லெவல் ஆக் ஷன் பிளான்’ பணிகளின் பட்டியலுக்கு அரசு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்தது. அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்ட பணிகளுக்கு தொழில்நுட்ப ஒப்புதல் பெறப்பட்டு, 10 கோடிக்கு குறையாமல், பேக்கேஜ் செய்யப்பட்டு, கே.டி.பி.பி. சட்டத்தின்படி மின் கொள்முதல் மூலம், டெண்டர் கோரப்பட வேண்டும்.
மைக்ரோ லெவல் ஆக் ஷன் பிளான் பணிகளை சரி பார்ப்பதற்கும் ஆன்லைன் மென்பொருள் தயாரிக்கப்பட்டு, மாதாந்திர முன்னேற்ற பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏரிகளின் புனரமைப்பு மற்றும் மேம்பாடு பணிகளை தொடங்கும் முன், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, செயல்திட்ட அனுமதி உத்தரவில், தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏரிகளின் கிராம வரைபடம், சர்வே வரைபடம், போன்று எல்லைகளை முறையாக குறிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றிட்டப் பிறகு பணிகளை துவங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.