மாநகர வளர்ச்சி புதிய திட்டங்கள்- பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

பெங்களூரு, பிப். 29:
பெங்களூரின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று பிபிஎம்பியில் இன்று தாக்கல் செய்யப்பட்ட‌ பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு புட்டண்ணா செட்டி டவுன் ஹாலில் இன்று காலை 10.30 மணியளவில் ராகேஷ் சிங் மற்றும் தலைமை ஆணையர் துஷார் கிரி நாத், சிறப்பு ஆணையர் முன்னிலையில் நிதிப் பிரிவின் சிவானந்த கலகேரி பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பெங்களூரு மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வழிகாட்டுதலின்படி இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளோம். இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெங்களூரு நகரில் ஒரு கோடியே நாற்பது லட்சம் மக்கள்தொகை உள்ளன. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஒப்பிட்டாலும், மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நகரமாக உள்ளது. பெங்களூரு நகரம் 741 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இரண்டு 225 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிராண்ட் பெங்களூருவை உருவாக்க நகரத்தை பசுமையாக்கவும், புதிய காற்றை சுவாசிக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சைக்கிள் ஓட்டுநர் நட்பு பாதைகள், அழகான பூங்காக்கள் மற்றும் ஏரிகளை உருவாக்க நோக்கமாக கொண்டுள்ளோம்.பிராண்ட் பெங்களூரு கருத்துருவில் 8 பிரிவுகள்:
நெரிசல் இல்லாத போக்குவரத்து பெங்களூரு, தூய்மையான‌ பெங்களூரு, பசுமையான பெங்களூரு, ஆரோக்கியமான பெங்களூரு, கல்வி பெங்களூரு, தொழில்நுட்ப‌ பெங்களூரு, துடிப்பான பெங்களூரு, நீர் பாதுகாப்பு பெங்களூரு ஆகும்.பிபிஎம்பியின் கீழ் உள்ள 20 லட்சம் சொத்துக்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குதல், சொத்து பதிவில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும். சொத்து பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கப்படும். நேர்யாக வரி செலுத்துவோர் பயனடையும் வகையில் திருத்தங்கள் செய்யப்படும். சொத்து வரி கணக்கு தாக்கல் செய்வது, எளிமைப்படுத்தப்பட்டு, வெளிப்படைத்தன்மையை கொண்டு வரப்படும். புதிய விளம்பரக் கொள்கை உருவாக்கப்படும். நிலங்களை கையப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ரூ. 6 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.கனகபுரா முக்கிய‌ சாலை முதல் பன்னேருகட்டா முக்கிய‌ சாலை வரை மற்றும் ஹென்னூரிலிருந்து பாகலூர் செல்லும் முக்கியமான சாலை கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் அதையே விரிவுபடுத்தி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள‌ வேண்டும். சாமராஜ்பேட்டையில் உள்ள முக்கியமான பதராயனபுரா சாலை
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.130 கோடி வழங்கப்படும். இது மட்டுமின்றி பெங்களூரின் வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், மாநில அரசின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்படும் என்றார்.