மாநிலத் தலைவர் கருத்து

ஈரோடு:பிப். 15: டெல்லியில் இடைத்தரகர்கள்தான் போராட்டம் நடத்துகின்றனர் என்றுதமிழக பாஜக விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் விசைத்தறி, கோழிப்பண்ணை, போர்வெல் தொழில் உள்ளிட்டவை நசிந்து வருகின்றன. இவற்றைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 10 சதவீதம் பணியை 3 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். பணிகளை விரைவாக முடித்து, திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.நெல் சாகுபடி குறைந்துள்ளதே அரிசி விலை ஏற்றத்துக்கு காரணமாகும்.
மத்திய அரசு அமல்படுத்திஉள்ள வேளாண் சட்டத்தின் 3 பிரிவுகளும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளன. அதனால் இங்குவிவசாயிகள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் போராட்டம் தூண்டிவிடப்படுகிறது.