மாநில அரசியலுக்குத் திரும்ப மாட்டேன் வதந்திகளுக்கு ஷோபா முற்றுப்புள்ளி

பெங்களூர். ஜூன் . 3 – தான் எந்த காரணம் கொண்டும் மாநில அரசியலுக்கு திரும்புவதில்லை என தெரிவித்திருப்பதன் வாயிலாக அனைத்து வியூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து இன்று மத்திய அமையச்சர் ஷோபா கரன்லஜி திரையை மூடியுள்ளார். பெங்களூரில் இன்று மாநில அரசியலுக்கு திரும்புவது குறித்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து ஷோபா கூறுகையில் நான் மாநில அரசியலுக்கு திரும்பி வரமாட்டேன். நரேந்திர மோதி எனக்கு விவசாய துறை பொறுப்பை அளித்துள்ளார். தவிர பல மாநிலங்களின் தேர்தல் பொறுப்புகளையும் கொடுத்துள்ளார்.. நான் அந்த பொறுப்புகளில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் மாநில அரசியலுக்கு வருவதாக எந்த இடத்திலும் ஆலோசனைகள் நடக்கவே இல்லை. இத்தகைய புரளிகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. கட்சி எனக்கு சில பொறுப்புகளை கொடுத்துள்ளது. அவற்றை நடைமுறை படுத்திகொண்டு என் பாதையில் நான் சென்றுகொண்டிருக்கிறேன். மாநில அரசியலுக்கு மீண்டும் நான் வரவே மாட்டேன் , இவ்வாறு ஷோபா உறுதிபட தெரிவித்துள்ளார்.